டக்ளஸ் தேவானந்தாவினால் மட்டுமே தமிழர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும் – வேட்பாளர் ஶ்ரீ ரங்கேஸ்வரன் !

Saturday, July 11th, 2020

நாட்டினுடைய ஜனாதிபதி ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு விட்டார். இந்த ஜனாதிபதி சார்ந்த கட்சியே மத்தியில் கூடிய ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பெருவெற்றியை எதிர்பார்த்த வண்ணமுள்ளார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாண உதவி நிர்வாக செயலாளரும், விருப்பு இலக்கம் ஒன்றில் போட்டியிடும் வேட்பாளருமான ஐயாத்துரை  சிறி ரங்கேஸ்வரன் (ரங்கன்) தெரிவித்துள்ளார்

வடமராட்சி கிழக்கு குடத்தனையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –  

தமக்கு எதிராக இழைக்கப்பட்ட அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராக தமது எதிர்ப்பை காட்டுவதற்கு மக்கள் தேர்தலை பயன்படுத்த வேண்டுமென அங்கலாய்க்கின்றமையை காணக்கூடியதாக உள்ளது. தேர்தல்களில் வாக்களிப்பது என்பது ஓர் அரசியல் இலக்கை எய்துவதற்கான கருவியாக இருக்குமிடத்து அவற்றில் பங்குபற்றுவது சரியாக இருக்குமென மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதினை காணக்கூடியதாக இருக்கின்றது. இனவாத ஐக்கிய தேசியக் கட்சி , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லாட்சி என்ற ஏமாற்று ஆட்சியில் மக்கள் கண்டிருந்த ஏமாற்றங்களை இத்தேர்தல் மூலமாக மாற்றியமைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

யுத்தத்தில் அழிவடைந்து இன்னலுற்றிருக்கும் மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றலுள்ள நிர்வாகஞானமுள்ள  தமிழ் பிரதிநிதிகளை டக்ளஸ் தேவானந்தா தலைமையில் எதிர்பார்க்கின்றார்கள். மத்திய அரசு கூட டக்ளஸ் தேவானந்தாவினால் மட்டும் தான் தமிழர் தரப்பு பிரச்சினைகளுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என நம்புகின்றனர்.

எமது மாவட்ட மக்களுடைய வீட்டுத்திட்ட தேவைகளாக இருந்தாலென்ன ஏனைய இளைஞர் யுவதிகள் பிரச்சினைகளாக இருந்தாலென்ன பிரதேசத்தின் அபிவிருத்தியாக இருந்தாலென்ன அரசாங்கத்தினால் மட்டும் தான் சிறப்பாக பெற்றுத் தர முடியும். ஒரு சில ஆசனங்களைப் பெறுகின்ற உதிரி உறுப்பினர்களால் கடந்த காலங்களில் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை.

ஆகவே, இந்த தேர்தலில் மக்கள் வீணைச்சின்னத்திற்கு அமோக ஆதரவை தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன். மேலும், எமது பிரதேச அபிவிருத்தி அன்றாட பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வுகளுக்கான தீர்க்கமான திட்டங்கள் எம்மிடம் மட்டுமே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: