துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் நாளை (5) நாடாளுமன்றில் இடம்பெறவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்ற நீதியரசர் குழாமினால் எடுக்கப்பட்ட தீர்மானம் இதுவரையில் நாடாளுமன்றத்துக்கு கிடைக்கபெறாமையினால் விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய கொவிட்-19 நிலை தொடர்பில், நாடாளுமன்றில் இன்று (04) சபை நடவடிக்கைகள் இடம்பெற்றன.
அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சி முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
கொவிட்-19 பரவல் நிலை காரணமாக, இந்த வார நாடாளுமன்ற அமர்வுகள், இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, இன்றும் நாளையும் மாத்திரம் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
நாளையதினம், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|