துறைமுக நகர் பணிகள் ஒக்டோபரில் ஆரம்பம்!
Tuesday, May 3rd, 2016
இலங்கையில் பருவப் பெயர்ச்சி காலநிலை முடிந்தபின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு துறைமுகநகர் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
சீன அரசின் நிதியுதவியுடன் 269 ஹெக்டேயர் விஸ்தீரணமான பரப்பில் இந்த திட்டம்முன்னெடுக்கப்படவுள்ளது. ஏற்கனவே இந்த நிர்மாணங்கள் மே மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் கொழும்பு துறைமுகத்தில் நீர்தடுப்பு சுவரின் திருத்த வேலைகள் தற்போதுசீனாவின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவித்தி அதிகார சபையின் பிரதி இயக்குனர் நிஹால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், போட்சிட்டி நிர்மாணித்தின் போது அகழப்படும் மண்ணை ஆழ்கடலில் மண்ணை கொட்டுவது குறித்த அனுமதி புவியியல் சரிதவியல் திணைக்களத்தினால்வழங்கப்பட்டுள்ளது
Related posts:
|
|
|


