இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவே இறுதி தீர்மானத்தை எடுக்கும் – சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவிப்பு!

Wednesday, October 26th, 2022

இரட்டை பிரஜாவுரிமையைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நாடாளுமன்றம் அன்றி தேர்தல் ஆணைக்குழுவே அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக வேட்பாளர்களை தெரிவுசெய்வது தேர்தல் ஆணைக்குழுவே என்பதால் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கமுடியும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று நாட்டில் எந்தவொரு பிரஜைக்கும் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருந்தால் நீதிமன்றம் முன்னிலையில் அதனை சவாலுக்குட்படுத்தும் உரிமையுள்ளதாகவும் இதற்கு முன்னர் இவ்வாறு இந்த விடயங்கள் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளதாக தமக்கு அறியக்கிடைத்துள்ளதாகவும் அதைவிடவும் மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டுள்ளார்களா என்பது தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் சட்டபூர்வமாக செயற்படவேண்டுமே தவிர அதுதொடர்பில் என்னால் எதனையும் செய்யமுடியாது. நாடாளுமன்றத்தின் செயற்பாடு சட்டங்களை உருவாக்குவதே என்பதை சுட்டிக்காட்டியுள்ள சபாநாயகர் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: