துறைமுக தொழிற்சங்கத்தினால் சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு!

துறைமுக தொழிற்சங்கம் இன்று மதியம் 12 மணி முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உடன்படிக்கையில் நூறு வீதம் உரிமம் துறைமுக அதிகார சபைக்கு வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் 23 துறைமுக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூடி கிழக்கு முனையத்தின் உரிமையை 100 சதவீதம் துறைமுக அதிகாரசபையின் கீழ் இல்லாவிடின் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்ட நிலையில் இன்று தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
Related posts:
பரீட்சைகளுக்கான மேலதிக பாடப்புத்தகங்கள் வெளியீட்டு திணைக்களத்தில்!
தேர்தல் செயற்பாடுகளை தடை செய்யும் எந்த அவசியமும் அரசுக்கு கிடையாது - அரசாங்கம் தலையிடப் போவதுமில்லை...
இவ்வருட இறுதிக்குள் உள்நாட்டில் 30 வீத மருந்து உற்பத்தி - சுகாதார அமைச்சு நம்பிக்கை!
|
|