துறைசார்ந்த தெரிவுகளை மேற்கொள்ளாமையே மாணவர்கள்  கல்வியில் பின்னடைவை எதிர்நோக்கு காரணம்: வடமாகாண ஆளுநரின் செயலாளர் காட்டம்!

Tuesday, August 2nd, 2016

இன்றைய மாணவர்கள்  கல்வியில் பின்னடைவை எதிர்நோக்குவதற்கான காரணம் தமது துறைசார்ந்த தெரிவுகளை மேற்கொள்ளாமையே எனத் தெரிவித்தார் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன்.

யாழ். மாவட்டக்  கல்வி வலயங்களின் நெறிப்படுத்தலின் கீழ் யாழ். மாவட்டத்தில் கல்வியின் பின்னடைவுக்கான காரணங்களைக்  கண்டறியும் வகையில் “கல்வியின் முன்னேற்றத்திற்காக நமது எதிர்காலச்சந்ததியின் மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுப்போம்”  எனும் கருப்பொருளில்  கல்வியிலாளர்கள்,பல்துறை சார்ந்தவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு  நேற்று முன்தினம் சனிக்கிழமை(30) யாழ் இந்துக்கல்லூரியின் அதிபர் தயானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் , மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர். இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

மானவர்களின் அடைவுமட்ட வீதத்தினைப்  பார்ப்பது என்பது தனி ஒருவரின் விடயமாகக் காணப்படமுடியாது. அடைவு மட்ட வீழ்ச்சியினை நாங்கள் நோக்குகின்ற போது  ஆசிரியர்கள்,மாணவர்களுக்கும் பொறுப்புணர்வுகள் காணப்படுகின்றன.

இன்றைய காலத்தில் கல்வித்துறை பல வகைகளிலும் மாற்றங்களைக் கண்டு வருகின்றது. எனினும்,  எமது கல்வியில் மறுமலர்ச்சியினை ஏற்படுத்த எமது பெற்றோர்கள், சமூகத்தினர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related posts: