துரோகத்தனத்தின் உச்சத்தை வெளிப்படுத்தி தீர்வினை குழப்பியடித்த சம்மந்தன் குழுவினரை வரலாறு மன்னிக்காது என்கிறார் ஈ.பி.டி.பி. தவிசாளர் மித்திரன் ஆவேசம்!
Saturday, June 13th, 2020
சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் ஈ.பி.டி.பி. இன் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தினை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து குழப்பியடித்த வரலாற்று துரோகத்தினை புரிந்த சம்மந்தன் அணியினர் ஏனையவர்களை துரோகிகளாக சித்தரிக்கும் வேடிக்கை நடக்கிறது.
இ்ந்த துரோகத்தனத்தை வரலாறு என்றைக்கும் மன்னிக்காது என்று தெரிவித்த தோழர் மித்திரன், உண்மையான துரோகிகள் யார் என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்
சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பில் இக்கருத்தினை தெரிவித்த அவர், எந்தவிதமான அழுத்தங்கள் எந்தத் தரப்பில் இருந்து வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு மக்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்தியிருக்கின்ற எமது செயலாளர் நாயகத்தின் கரங்களை பலப்படுத்துவதன் மூலமே அபிவிருத்தி, அன்றாடப் பிரச்சினைகள், அரசியல் போன்ற அனைத்து விடயங்களையும் மக்கள் நிறைவேற்றிக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|
|


