அதிகமாக பணம் அச்சிடப்பட்டமையே பணவீக்கத்துக்கான பிரதான காரணம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டு!

Friday, July 21st, 2023

அதிகமாக பணம் அச்சிடப்பட்டமையே பணவீக்கத்துக்கான பிரதான காரணம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றியபோதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் அதாவது 21 மாதங்களில் 35,042.8 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளது. மாதம் ஒன்றிற்கு சராசரியாக 1669 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே பணவீக்கம் பாரியளவில் அதிகரித்தது எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் பணவீக்கமானது 69.8 வீதமாக அதிகரித்தது. எனினும் கடந்த ஜுன் மாதம் 12 வீதமாக குறைவடைந்துள்ளது. ஆனால் இந்த மாதத்தின் இறுதியில் பணவீக்கமானது 7 வீதமாக சரிவடையும் எனவும் மத்திய வங்கி எதிர்ப்பார்ப்பினை வெளியிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: