துன்னாலையில் திடீர் சுற்றிவளைப்பு – மூவர் கைது!

Saturday, September 16th, 2017

துன்னாலப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர்ச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே குறித்த மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த யூலை மாதம் 09 ஆம் திகதி துன்னாலைப் பகுதியில் டிப்பர் வாகனத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்திச் சென்ற இளைஞர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர் உயிரிழந்திருந்தார். குறித்த சம்பவத்தையடுத்து துன்னாலைப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்தையடுத்து பொலிஸாரின் வாகனங்கள் மற்றும் வாகனங்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடாத்தியிருந்தனர். இதன் போது பொலிஸ் அதிகாரியொருவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலின் போது அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதனையடுத்துத் துன்னாலைப் பகுதியில் திடீர் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று அதிகாலையில் நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: