தீவகப் பகுதிக்குள் எதிர்வரும் ஏழு நாட்கள் ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்த ஊர்காவற்றுறை நீதிமன்றம் தடை உத்தரவு!

யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில் இன்று 21 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 27ஆம் திகதிவரையான ஏழு நாட்களுக்கு ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்துவதற்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது.
ஊர்காவற்றுறை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பிரகாரம் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய நேற்று வெள்ளிக்கிழமை மாலை இந்த தடை உத்தரவு நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.
6 நபர்களை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 106 ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லையைத் தடுப்பதற்கும் கோவிட் -19 தொற்று நோய்த் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் தனிமைப்படுத்தல் பிரிவின் கீழும் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை. அதனால் பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் கோவிட் – 19 நோய்த் தொற்று கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்த தடை உத்தரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|