தீவகத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் பிரதமருக்கு மகஜர் !

தீவகத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்து மக்கள் மீள்குடியேற நடவடிக்கையெடுக்க வேண்டுமென வேலணை பிரதேச சபை தவிசாளர் மகஜர் மூலம் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்தான மகஜர் யாழ் அரச அதிபர் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அம் மகஜரில் தீவகத்திலுள்ள மண்டைதீவு, அல்லைப்பிட்டி, வேலணை, புங்குடுதீவு, நயினாதீவு ஆகிய பகுதிகளிலுள்ள 66 ஏக்கர் தனியார் காணி படையினர் வசமுள்ளது. அதுபோல் 13 ஏக்கர் அரச காணியும் படையினர் வசமுள்ளது.
இந்நிலையில் மக்களின் மீள்குடியேற்றம் கருதி அக்காணிகளை விடுவிக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்துடன் மண்டைதீவில் மக்கள் குடிநீருக்கு பயன்படுத்தும் நன்னீர் கிணற்றினை கடற்படையினர் பாவிப்பதால் மக்கள் குடிநீரினைப் பெற்றுக்கொள்ள நீண்டதூரம் செல்லவேண்டியுள்ளது. இந்த சிரமங்களை தவிர்க்க கிணற்றினை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|