தீர்வு வழங்காவிடின் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு!

Thursday, July 25th, 2019

தபால் ஊழியர்களின் சம்பள உயர்வு உட்பட சில கோரிக்கைகள் குறித்து இன்று(25) நடைபெறவுள்ள விசேட தெரிவுக் குழுக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்படுமென ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தன பண்டார ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

எனினும், உரிய தீர்வொன்று வழங்கப்படாதவிடத்து தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கடந்த 23ம் திகதி அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட போது, அரசாங்க நிறுவனங்கள், சேவையாளர்களின் எண்ணிக்கைக்கமைய தபால் ஊழியர்களுக்கு மட்டும் சம்பள உயர்வு வழங்க முடியாதெனத் தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: