தீர்வு கிடைக்காவிடின் தொடர் போராட்டம் – எச்சரிக்கிறது தபால் தொழிற்சங்கம்!

Saturday, July 20th, 2019

தபால் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின், அடுத்தவாரம் முதல் நாடுமுழுவதும் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக
தபால் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள முறைமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 16ஆம் திகதி பிற்பகல் 4 மணிமுதல்இரண்டு நாட்கள் மத்திய தபால் பணிமனையின் அனைத்து ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்புக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த விடயங்கள் தொடர்பாக உரிய தரப்புடன் திங்கட்கிழமை கலந்துரையாடி, அதன்அடிப்படையில் தீர்வுத்திட்டம் ஒன்றை தயாரித்து செவ்வாய்கிழமை அமைச்சரவையில் முன்வைப்பதாக அமைச்சர் ஹலீம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: