திலீபன் MP நிதி ஒதுக்கீடு – 10 இலட்சம் நிதி செலவில் புனரமைக்கப்படும் விவேகானந்தா விளையாட்டுக் கழக மைதானம்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான குலசிங்கம் திலீபனின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா கணேசபுரம், விவேகானந்தா விளையாட்டுக் கழக மைதானத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் தீலீபனிடம் குறித்த விளையாட்டுக்கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் அப்பிரதேச மக்கள் முன்வைத்திரந்த கோரிக்கைக்க இணங்கவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது
இதனடிப்படையில் மைதானத்தின் புனரமைப்பு மற்றும் மின்னொளி வசதிகளை மேற்கொள்வதற்காக பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் ஒதுக்கீட்டின் கீழ் திலீபன் MPயால் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது
இதன்படி நேற்றையதினம் குறித்த மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டிருந்து
குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர் கமலதாசன் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஜெயா மற்றும் கட்சியின் பிரதேச செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|