திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்த அரசியல் சமூக பொருளாதார மறுமலர்ச்சி-  பிரதமர் !

Friday, July 28th, 2017

1977 ஆம் ஆண்டில் இலங்கையில் திறந்த பொருளாதாரம் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து அரசியல் சமூக பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டதாக பிரதமர் ரணில் விக்pகரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  நிழ்வில் கலந்துகொண்ட  பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.

மேலும் உரையாற்றுகையில்: 1977இல் ஆட்சிப்பீடம் ஏறிய அரசு திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியதுடன் நில்லாமல் பல அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பித்தது. அவற்றுள் துரித மஹாவலி அபிவிருத்தித் திட்டம் பிரதானமானது. பல அரச நிறுவனங்களும் ஆரம்பிக்கப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் திறந்த பொருளாதார கொள்கைகளை அவரைத் தொடர்ந்து ஆட்சிப்பீடம் ஏறிய சகல தலைவர்களும் முன்னெடுத்தார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கமும் அதனை மாற்றத்துடன் முன்னெடுத்துச் செல்லும் என்று பிரதமர் அங்கு நம்பிக்கை வெளியிட்டார்.

1977 ஆம் ஆண்டு மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஜே.ஆர்.ஜயவர்த்தன, ரணசிங்க பிரேமதாஸ ஆகிய ஜனாதிபதிகளுக்காகவும், ஐக்கிய தேசிய கட்சியின் புகழ்பெற்ற அரசியல்வாதிகளுக்காகவும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நேற்று இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 40 வருடகால பாராளுமன்ற வாழ்க்கையை கௌரவிக்கும் விதத்தில் அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

Related posts:

நியாயமான விலைக்கு அத்தியவசியப் பொருட்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு அமைச...
கடந்த ஆண்டு அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகளில் 4% பழுதடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தகவ...
தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது தேர்தல்கள் ஆணைக்...