திறக்கப்படாத எஞ்சிய தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் அடுத்தவாரம்முதல் மீள ஆரம்பம் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!
 Monday, November 15th, 2021
        
                    Monday, November 15th, 2021
            
கொரோனா காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்ட மற்றும் இதுவரை திறக்கப்படாத அனைத்து பாடசாலைகளினதும் ஏனைய தரங்களை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இதுவரை ஆரம்பிக்கப்படாத தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இடம்பெற்று வரும் பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆரம்ப பிரிவு வகுப்புகள் மற்றும் 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் முன்னதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், 6 முதல் 9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காணாமல்போன தொண்டர் ஆசிரியை எச்சங்களாக மீட்பு !
இந்தியாவிலிருந்து 146 அகதிகள் நாடு திரும்ப விருப்பம்!
ஐந்து தூதரக அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் வெளிவிவகார அமைச்சசின் கோரிக்கை ஜனாதிபதியால் நிர...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        