திருத்தப் பணிகளுடன் தொடர்புடைய வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் 15 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!
Monday, June 13th, 2022
இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுடன் தொடர்புடைய வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் 15 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை 12 ஆம் திகதி வரை பட்டியல்கள் காட்சிப்படுத்தப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் மற்றும் வாக்காளர் பட்டியலிலுக்கு சேர்க்கப்படும் பெயர் பட்டியல் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் ஜூலை 12 ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்படும்.
இந்த காலப்பகுதியில் கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கை வந்தடைந்தார் இந்தோனேசிய ஜனாதிபதி!
ஜனாதிபதி செயலணி பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ!
மீள திறக்கப்பட்டது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் - செயலிழந்த மின்னுற்பத்தி இயந்திரமும் ...
|
|
|


