திருகோணமலையில் நாளொன்றுக்கு 60 தொற்றாளர்கள் வீதம் பதிவு – பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை!
Friday, April 30th, 2021
திருகோணமலை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 60 கொவிட் தொற்றாளர்கள் வீதம் பதிவாவதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் டீ.ஜீ.எம். கொத்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 500 க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்கள் குச்சவேலி மற்றும் இச்சலம்பத்து ஆகிய கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில் குறித்த சிகிச்சை நிலையங்களில் 160 நோயாளர்களுக்கு மாத்திரமே இடவசதி உள்ளது.
ஏனைய நோயாளர்கள் மாவட்டத்தின் வெளி சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அதேபோல், இடைநிலை சிகிச்சை மையங்களாகப் பயன்படுத்தக்கூடிய இடங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை கறிப்பித்தக்கது.
Related posts:
ஆட்பதிவு நடவடிக்கை தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை வலுப்படுத்த நடவடிக்கை - ஜனாதிபதி!
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு!
|
|
|


