திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிகள் ஜனவரியில் ஆரம்பம் – மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Friday, December 18th, 2020

நாட்டின் முதலாவது திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஜனவரி 13 ஆம் திகதி வத்தளையில் ஆரம்பிக்கப்படும் என்று மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டில் உருவாகக்கூடிய மின்சார நெருக்கடிக்கு மாற்று வழியாக கெரவலபிட்டியவில் 300 மெகாவொட் இரண்டாவது ஒருங்கிணைந்த சுழற்சி திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையமொன்றைத் தாபிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த மின் உற்பத்தி நிலையத்தை சுயாதீனமான மின்சக்தி கருத்திட்டமொன்றாக தனிப்பட்ட முதலீட்டின் ஊடாக கட்டுதல், உடமையாக்கல், தொழிற்படுத்தல், மாற்றுதல் என்னும் வர்த்தக மாதிரியின் கீழ் நிர்மாணித்து நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதெனவும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, அடுத்த மூன்று வருட காலப்பகுதிக்குள் குறித்த கருத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் சர்வதேச ரீதியில் போட்டிகரமான கேள்வி நடைமுறைக்கு அமைவாக பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை இனங்காண்பதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை கடந்த செப்டெம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது

Related posts: