திட்டமிட்டபடி பரீட்சைகள் நடைபெறும் – கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி. பெரேரா அறிவிப்பு!

இந்த வருடத்தில் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்களில் மாற்றமெதும் இல்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசி ரியர் கபில சி. பெரேரா தெரிவித்துள்ளார்
முன்பதாக உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2021 ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்தது. இருப்பினும் இவை கொரோனா தொற்று நிலையில் பாதிப்பை கருத்திற்கொண்டு இரண்டு முறை பின்போடப்பட்டன.
முன்பு திட்டமிட்ட வகையில் புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22 ஆம் திகதியும், உயர்தர பரீட்சையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதிமுதல் ஆரம்பிப்பதற்கும் எதிர்பார்ப்பதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி. பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் சீரற்ற காலநிலையால் 92 பேர் பலி!
பிளாஸ்ரிக் அர்ச்சனை தட்டுகளுக்கு தடை!
பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்திய சாரதிகளை அழையுங்கள் - தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோர...
|
|