திட்டமிடல் சேவையின் 3 ஆம் தரத்துக்கான நேர்முகப்பரீட்சைக்கு 101 பேர் தெரிவு!

Thursday, April 4th, 2019

இலங்கை திட்டமிடல் சேவையின் மூன்றாம் தரத்திற்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட திறந்த போட்டிப்பரீட்சையின் அடிப்படையில் 101 பேர்  நேர்முகப்பரீட்சைக்கு தோற்றுவதற்கான அடிப்படைத்தகுதியை பெறறுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரட்ணசிறி அறிவித்துள்ளார்.

இவ்வாறு தகைமை பெற்றோரில் 14 தமிழ்ச்சமூகத்தை சேர்ந்தோரும் 5 முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தோருமாக 19 சிறுபான்மைச் சமூகத்தை சேர்ந்தோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். ஏனைய 82 பேரும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தோராவர்.

தமிழ்ச்சமூகத்தை சேர்ந்தவர்களின் விபரம் வருமாறு; ஜே.ரெமிண்டன், எப்.கென்ஜிட், ரி.தாரணி, வீ.கிருஷ்ணாளினி, எம்.அன்ரனிஸ், எஸ்.சர்மி, பி.பிருக்தினி, ஆர்.ஜே.மைக்கல் ராஜ், பி. அர்ச்சனா, கே. இலக்கியா, எஸ்.கஜீதரன், என். நிரோஜன், ரி.திவாகரி. முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களின் விபரம்; எஸ்.சிப்கா, கே.ருஸ்தா,ஏ.எம்.எம்.நபீஸ், ஏ.ஏ.எஸ்.ரிபாயா, ஜே.பாத்திமா ரிஸ்னா.

மேற்படி சேவைக்கு இலங்கை பல்கலைக்கழக்களில் வகுப்புச் சித்தி பெற்றோர் மட்டுமே போட்டிப்பரீட்சை மூலம் சேர்த்துக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மேற்படி சேவைக்காக நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீடசை மூலம் ரீ.ஜெயந்தன் எனும் தமிழர் மட்டும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். 30 பெரும்பான்மையினர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை திட்டமிடல் சேவை மூன்றாம் தரத்திற்காக திறந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீடசைகள் மூலம் 112 சிங்களவர்களும் 20 சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்களும் நேர்முகப்பரீட்சைக்காக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: