திட்டங்களை தடை செய்வது பாவச் செயல் – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்!

அபிவிருத்தி செயற்பாடுகளின் போது சூழல் மாசடைவதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டதே திறைசேரி அபிவிருத்தி சட்டமூலம் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
அபிவிருத்தியின் போது ஏற்படுத்தப்படும் சூழல் மாசடைதலை தடுப்பதற்காகவே இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் மற்றும் அரசியல் விசமிகள் சிலர் ஒன்றிணைந்து மக்களை திசைதிருப்பும் செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எதிர்கால இளைஞர்களுக்காக மேற்கொள்ளப்படும் இவ்வாறான திட்டங்களை தடை செய்வது பாவச் செயலாகும் என அகில விராஜ் காரியவசம் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
முதன்முதலில் 3 மேல்நீதிமன்ற நீதிபதிகளுடன் வித்தியா கொலை வழக்கு விசாரணை!
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை!
சிவராத்திரி வழிபாடுகளில் ஆகக் கூடியதாக 50 பேரை மட்டும் அனுமதிக்குமாறு வலியுறுத்து!
|
|