திங்கள்முதல் 30 குறுந்தூர ரயில் சேவைகள் நிறுத்தம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, January 14th, 2023

செலவினங்களை குறைக்கும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறுந்தூர முப்பது ரயில் சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க பிரதான ரயில் பாதைகளில் 18 ரயில் சேவைகளும் களனி வெளி பாதையில் 02 ரயில் சேவைகளும் கரையோர ரயில் பாதையில் 08 ரயில் சேவைகளும் மற்றும் புத்தளம் ரயில் பாதையில் 02 ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி 30 ரயில் சேவைகளை இடைநிறுத்த திணைக்களம் திர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: