திங்கள்முதல் வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு விநியோகம் – பிரதி தபால்மா அதிபர்!

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வாக்காளர் அட்டைகளை தபால் நிலையங்களில் கையளிக்கும் நடவடிக்கை இன்றும், நாளையும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளினூடாக, பிரதேச தபால் அதிகாரிகளிடம் வாக்காளர் அட்டைகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 19 மற்றும் 26 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
குறித்த தினங்களில் மக்கள் வீடுகளிலிருந்து தமக்குரிய வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறு பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
வரி விலக்களிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை சதொச மூலம் வழங்க நடவடிக்கை!
கொழும்பில் மீண்டும் கொரோனா கொப்புகள் ஏற்படும் ஆபத்து - ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் குமார தெர...
உலகளாவிய நிலையான அபிவிருத்தி சுட்டெண்ணில் இலங்கைக்கு 2 ஆவது இடம்!
|
|