தாழமுக்க நிலையின் காரணமாக அவதானத்துடன் செயற்பட வலிறுத்தல்!

Saturday, September 16th, 2017

வங்காளவிரிகுடாவின் கடற் பிரதேசத்தில் வலுவடைந்துவரும் தாழமுக்க நிலையின் காரணமாக நாட்டைச் சுற்றியும் வங்காளவிரிகுடாவின் பெரும்பாலான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்.

இந்த பிரதேச கடல் அடிக்கடி கொந்தளிப்புடன் காணப்படும். கடல் பிரதேசத்தில் அடிக்கடி கடும் மழையும் பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் புத்தளத்தில் இருந்த காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும், ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான ஆழமான கடல் மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் கொண்டதாக அமைந்திருக்கும். இந்த பிரதேச கடலும் அடிக்கடி கொந்தளிப்புடன் காணப்படும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்களாவிரிகுடா கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வேகத்தை கொண்டதாக அமைந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.  இந்த கடற்பிரதேசத்தில் கடல் அடிக்கடி கொந்தளிப்புடன் காணப்படும்.

Related posts:


பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் வலியுறுத்து!
இலங்கை - பாகிஸ்தான் வர்த்தக உடன்படிக்கையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விசேட கலந்துரையாடல் - பாகிஸ...
எரிபொருளுக்காக மாதாந்தம் 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக தொகை செலவிடப்படுகிறது - வலுசக்தி அம...