தாதியர்களின் வெற்றிடங்களை நிரப்ப முடியாத நிலை!
 Tuesday, March 13th, 2018
        
                    Tuesday, March 13th, 2018
            
வடக்கு மாகாணத்தில் வெளிமாவட்டத் தாதியர்கள் நியமிக்கப்பட்டு இடமாற்றம் பெற்றுச் செல்வதால் தாதியர்களின் வெற்றிடங்களை நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
சுகாதார அமைச்சால் வடக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்படும் தாதியர்கள் குறிப்பிட்ட காலத்தில் இடமாற்றம் பெற்று செல்வதால் ஏற்படும் வெற்றிடம் தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சின் செயலர் கருத்து தெரிவித்தபோது வடக்கு மாகாணத்தில் நடப்பு வருடத்தில் 71 தாதியர்கள் பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இரண்டு மூன்று வருடங்கள் இங்கு சேவையாற்றியவர்கள்.
இங்கு நீண்ட காலமாக தாதியர் பற்றாகுறை நிலவுகின்றது. அனுமதிக்கப்பட்ட 851 ஆளணியில் 153 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. புதிதாக 110 தாதியர்கள் வடக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 71 தாதியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளமையால் அந்த இடங்களுக்கே அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        