குடாநாட்டில் சேதனப் பசளையின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Friday, August 21st, 2020

யாழ் மாவட்டத்தில் சேதனப் பசளையின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்றையதினம் (20)  யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் –

கொரானா தாக்கத்துக்கு பின்னர் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகளுடைய பாதிப்புகள் தொடர்பில் விவசாய சம்மேளத்தினர் தெரிவித்துள்ளனர்.

உரப் பாவனை மற்றும் அதனுடைய தாக்கம் அதனுடைய பாவனை முறை தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன் சேதனப் பசளையினுடைய பயன்பாடு மிகவும் குறைவாக இருப்பதாகவும் அசேதனப் பசளையின் பயன்பாடு மிகவும் அதிகமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

சேதனப் பசளை உற்பத்தி செய்யும் நிலையங்கள் வேலணை மற்றும் காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் உருவாக்கப்பட்டுள்ளன அவற்றினுடைய செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் வேலணை பிரதேச செயலர் பிரிவில் உள்ள சேதனப் பசளை தயாரிக்கும் இடம் செயற்பாடு இல்லாத நிலையில் காணப்படுவதாகவும். எதிர்வரும் காலங்களில் வேலணை பிரதேச பிரிவில் உள்ள சேதனப் பசளை உற்பத்தி நிலையத்தினை சரியான முறையில் முன்னெடுப்பது தொடர்பில் உரிய தரப்பினர்களுடன் கலந்துரையாடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை சில பிரதேச செயலர் பிரிவுகளில் சேதனப் பசளையினுடைய பயன்பாடு மிகவும் அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக புத்தூர் சாவகச்சேரி கரவெட்டி போன்ற பிரதேசங்களில் இந்த சேதனப் பசளை பயன்பாடு அதிகமாகக் காணப்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

அசேதனப் பசளை அதிக விலையிலேய தனியார் கடைகளில்; பாவனையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது. இதனை விலை கட்டுப்பாட்டு பிரிவினர் மூலம் கட்டுப்படுத்தி மக்களுக்கு சரியான விலையை உறுதிப்படுத்தி விற்பனை செய்யக்கூடிய நிலைமையினை ஏற்படுத்துவதாகவும்; தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் 60 ஆவது அகவை பூர்த்தியை முன்னிட்டு நல்லூரில் மாபெரும் சிரமதானம்...
மாகாணசபைத் தேர்தலை நடத்த இரண்டு முறைகள் உள்ளன - தேவையான திருத்தங்களை மேற்கொள்ள நாம் தயாராகவே இருக்க...
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடு - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள்...