தவறுகளுக்கு  இடமில்லை -ஜனாதிபதி

Tuesday, August 1st, 2017

பௌத்த புண்ணிய பூமியான இந்த நாட்டில் நியாயமான சமூகத்தை நோக்கி பயணிப்பவர்கள் மாத்திரமே நிலைத்திருக்க முடியும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

ஹிக்குராங்கொட வலயக்கல்வி அலுவலகத்தின் புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்ட உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, ‘குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்டி ஆட்சி அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தனர். தற்போது 113 ஆசனங்களை பெற்று நாடாளுமன்றத்தில் அதிகாரத்தை நிரூபிக்க முயற்சிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் தலைகளின் எண்ணிக்கையை மாற்றி ஆட்சியை கைப்பற்றுவதற்கு கனவு கண்டாலும் அதற்கு எனது விருப்பத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்திற்கான தடைகளை அகற்றியே தற்போதைய அரசாக்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. வெற்று கோஷமிடுபவர்கள் நாட்டில் பல்வேறு குழப்ப நிலையை ஏற்படுத்துகின்றனர். அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களை திசை திருப்புவதே இவர்களின் நோக்கதமாக உள்ளது. இந்த நாட்டில் நியாயமான சமூகத்தை நோக்கி பயணிப்பவர்கள் மாத்திரமே நிலைத்திருக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts: