இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை நாடவும் – பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Wednesday, February 16th, 2022

ஒமைக்ரொன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியன சமூகத்தில் மிக வேகமாக பரவி வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக  சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனால் 48 மணிநேரங்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் தமக்கு எந்த வகையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்ற முடிவுகளை தாமாக எடுத்துக் கொள்கின்றனர். இதனைவிடுத்து மருத்துவ உதவியை நாடுவதே சிறந்த தெரிவாக அமையும்.

இன்றைய நாட்களில் சமூகத்தில் ஒமைக்ரொன் மற்றும் டெங்கு காய்ச்சல்  ஆகியவற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே, 48 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவதே முதன்மையானது என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்களுக்கு ஆளாகாமல், தகுதியானவர்கள் கூடிய விரைவில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு வைத்தியர் ஹேமந்த ஹேரத் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: