தவறான தடுப்பூசி ஏற்றியதால் 15 இலட்சம் பெறுமதியான நூற்றுக்கணக்கான புறாக்கள் இறப்பு!

Thursday, November 15th, 2018

யாழ்ப்பாணம் பூநாறி மரத்தடி பிரதேசத்தில் புறாக்களுக்கு தவறான தடுப்பூசி ஏற்றப்பட்டதால் புறாக்கள் இறக்க நேரிட்டதாக புறாக்களை வளர்த்து வந்த உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அவர் இச்சம்பவம் குறித்து விபரிக்கையில்  சமர்கிங், ரெட்கிங், சமர்பவுடர், வைட்கிங், புள்ளிகிங், ஹோமர், ஜெயன், எகிப்சன் சுவிப், நெற்செக்கர், ரேசிங் ஹோமர், லோங்கெயார் என 15 இலட்சம் பெறுமதியுடைய புறாக்கள் தன்னிடம் இருந்தன.  சில புறாக்களுக்கு குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய இயல்பான நோய்களில் இருந்து பாதுகாப்பதற்காக தடுப்பூசி ஏற்ற முடிவு செய்து மிருக வைத்தியர் என அடையாளம் காட்டப்பட்ட மருத்துவர் ஊடாக புறாக்களுக்கு காலில் தடுப்பூசி ஏற்றப்பட்டது. மறுநாள் காலையில் புறாக்கள் நடக்க இயலாமல் சிரமப்பட்டன. இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது காலில் தடுப்பூசி ஏற்றப்பட்டதால் அது அவ்வாறுதான்  இருக்கும் என பதிலளித்தார். நடக்க சிரமப்பட்ட புறாக்கள் துடிதுடித்து இறக்க ஆரம்பி;த்தன.

இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை; தொடர்ந்து புறாக்கள் இறந்தமைக்கான காரணத்தை ஆராய்ந்தபோது அளவுக்கதிகமான மருந்து எற்றப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் புறாக்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறாக்களுக்கு மருந்தேற்றியவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டதில் புறாக்களுக்கு ஏற்கனவே நோய் இருந்ததாகவும், அவற்றில் சில ஏற்கனவே இறந்துள்ளதை புறா உரிமையாளர் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றய மருத்துவர் பற்றி தெரியவருவதாவது. அவர் மிருக வைத்தியரல்ல என்பதும், மிருக வைத்தியத்தில் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையில் மிருகங்களின் நோய்களை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகூட வசதிகள் இல்லாதுள்ளமையால் துல்லியமாக கருத்துக்களை வெளியிடமுடியாதுள்ளது தெரிவிக்கப்படுகிறது.

பருத்தித்துறையில் சுகாதார சீர்கேடு காரணமாக ஒன்பது உணவு விற்பனையாளர்களுக்கு தண்டப்பணம் அறவீடு

பருத்தித்துறை நகர் பகுதியில் சுகாதாரமற்ற உணவு கையாளுகை, அனுமதி பபத்திரமின்றி உணவு உற்பத்தி, விற்பனை, சுகாதார சீர்கெடான நிலையில் விற்பனை பகுதி, மற்றும் களஞ்சிய பகுதிகளை பேணியமை, சுகாதாரமற்ற நிலையில்  வெதுப்பக உணவுப் பொருட்களை நடமாடும் வாகனங்களில் விற்பனை என சுகாதாரத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வர்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக உணவு கட்டளைச்சட்டத்தின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றத்தால் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர் பரிவு-02 பொதுச்சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனாலட் இந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார். நேற்று முன்தினம் இவ்வழக்கை தனித்தனியாக விசாரணை செய்த பருத்தித்துறை நீதிமன்றம் வர்த்தகர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.

கட்டுப்பாட்டு விலையை மீறி பசளையை விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – யாழ் மாவட்ட செயலாளர்

யாழ் மாவட்டத்தில் நெல் மற்றும் பயிர்களுக்கான பசளைகளின் கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்ய கூடாது என யாழ் மாவட்ட செயலாளர் நா. வேதநாயகன் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார். அவ்வாறு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக தயவு தாட்சண்யமின்றி உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  நெல் மற்றும் பயிர்களுக்கான பசளைகளை கமநல சேவை நிலையங்களில் ஒரு மூடை 500 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ளலாம்.. தனியார் வர்த்தக நிலையங்களில் இவற்றை ஆயிரம் ரூபாவுக்கே விற்பனை செய்ய முடியும்.  கூட்டு உரம் எனப்படும் கலவை உரத்தை தனியார் கடைகளில் 1,150 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகள் எந்த இடத்திலும் அதிகமாக விலைகொடுத்து மேற்படி பசளைகளை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அவ்வாறு விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் குறித்து அருகில் உள்ள பிரதேச செயலகங்களுக்கு அல்லது மாவட்ட செயலகத்தில் முறையிடுமாகு கேட்டுக்கொண்டார்.

Related posts: