தவணைப் பரீட்சைகள் இரத்துச் செய்யப்படமாட்டாது!

நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் பூர்த்தி செய்ய முடியாமல் போன பாடங்களை நிவர்த்திப்பதற்காக பாடசாலை மட்டத்தில் பொருத்தமான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக கல்வி அமைச்சு, பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.
எந்த நிலைமையிலும் தவணைப் பரீட்சையை ரத்துச் செய்ய வேண்டாமென அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.ரத்னாயக்க கேட்டுள்ளார்.
பாடவிதானங்களை நிவர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை வகுக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
ஜனாதிபதியிடம் தீர்வுகோரும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
எல்லைதாடும் மீனவர் சர்ச்சை: அமைச்சர்களான மங்கள சமரவீர, மஹிந்த அமரவீர இந்தியா விஜயம்!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு புலனாய்வு அமைப்புகள...
|
|