நாடு தழுவிய ரீதியில் இந்திய அம்பியுலன்ஸ்!
Thursday, October 12th, 2017
அடுத்த வருடம் முதல் நாடு தழுவிய ரீதியில் இந்திய அம்பியுலன்ஸ் சேவை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற பாடசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளுக்கு உபகரணங்களை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் 88 அம்பியுலன்ஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன. மேலும் 250 அம்பியுலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட இருப்பதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படுமென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலண்டனிலிருந்து வந்தவரை 15 மணி நேரங்களுக்கும் மேலாக நீர் வழங்காது தாக்கி சித்திரவதை செய்த தெல்லிப்பள...
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டணம் திருத்தம் நாடாளுமன்றில்!
சாரதிகளுக்கு விபத்து சார்ந்த பயிற்சிகள்!
|
|
|


