தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு கோப் குழு விசாரணைக்கு அழைப்பு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக அந்நிறுவனம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப் குழு) அழைக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்..
இதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆஜராகுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 21 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஏலத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை கோப் குழு முன்னிலையில் அழைக்கவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் கடந்த 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
முன்னேற்றத்தைத் தவிர வேறு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவையாற்றுபவர்கள் ஆசிரியப் பெருந்தகைகள் - ஐயாத்...
160 மில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட கடன் தொகைக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம்!
யாழ் மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை தொடரவுள்ள மாணவர்களுக்கு 1.68 மில்லியன் நிதியில் புலமைப்பரிச...
|
|