தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பு – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
எனினும், நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
இந்த வருட இறுதியில் எட்கா உடன்படிக்கை கைச்சாத்தாகும்!
பால் மாவின் விலைகள் குறைப்பு!
யாழ் மாநகர சபையின் ஒத்துப்போக முடியாது- தவறுக்கு மன்னிப்பு கோரினால் தொடர்ந்து ஆதரவு- முன்னாள் முதல்வ...
|
|