தற்காலிக நிர்வாக சபையின் கீழ் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை!
Thursday, July 27th, 2017
சர்ச்சைக்குரிய நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை நாடாளுமன்ற சட்டமூலத்தின் ஊடாக உள்ளீர்க்கப்படும் வரை நிர்வாக சபை ஒன்றினால் நிர்வகிக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னாள் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அஜித் மென்டிஸ் இதன் தலைவராக பணியாற்றவுள்ளார். அவரின் தலைமையில் துறைசார்ந்தோர்கள் உள்ளடங்கிய நிர்வாக குழுவொன்றினை, 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கும், அமைச்சுக்கு 2017ம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து மாதாந்தம் 200 மில்லியன் ரூபா நிதியினை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
Related posts:
ரஷ்ய பல்கலைக்கழகங்களை நீக்கியது இலங்கை – கவலை வெளியிட்டுள்ளது ரஷ்ய தூதரகம் !
'யாஸ்'அதி தீவிர புயல் ,ஒடிசா அருகே வங்கக்கடலில் கரையை கடக்கிறது!
நீர் கட்டணம் செலுத்துவதற்காக சலகை காலம் அறிவிப்பு!
|
|
|


