தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை – பாடசாலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையிலான பாடசாலை அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் நேற்றைய தினம் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளன.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கு அதிக பட்சமாக 176 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டது. வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு 167 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டது.
அத்துடன் கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி, வவுனியா தமிழ் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு 164 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
Related posts:
இலங்கையில் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: தொற்றாளர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகாரிப்பு!
மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்பு - தீவிர புலன் விசாரணையில் யாழ்ப்பாணம் பொலிசார்!
சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனம் தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஆரம...
|
|