தரம் 05 பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை!

எதிர்வரும் 17ம் திகதி முதல் 21ம் திகதி வரையான காலத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற இருப்பதால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மாதிரி வினாத்தாள்களை அச்சிடல், அவற்றை விநியோகித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாதிரி வினாத்தாள்களை வழங்குவதாக பதாகைகள் ஒட்டுவது, துண்டுப் பிசுரங்களை விநியோகித்தல் மற்றும் குறித்த காலப்பகுதியில் அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக பிரச்சாரங்கள் மேற்கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
Related posts:
மீண்டும் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு!
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ கருத்து!
நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் பொலிஸ் துறையின் தற்போதைய பணிகள் குறித்தும் புதிய பொலிஸ்மா அதிபருட...
|
|