தரம் ஒன்று மாணவர் ஆட்சேர்ப்பில் முறைகேடு: ரோயல் கல்லூரியில் 07 பேர் இடைநிறுத்தம்!

Saturday, January 28th, 2017

இவ்வாண்டுக்கான தரம் ஒன்றிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து கொழும்பு ரோயல் கல்லூரியில் 07 அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கு அமைய விஷேட விசாரணை குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த நபர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நேர்முகத் தேர்வுக் குழுவில் அங்கம் வகிக்கும் மூவர்களான, கொழும்பு ரோயல் கல்லூரியின் பிரதி அதிபர், துணை அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவரும், மேன்முறையீட்டு குழுவிலுள்ள 04 அதிகாரிகளான தர்மாலோக வித்தியாலயத்தின் அதிபர், மிலாகிரிய புனித பாவுலு பாலிகா வித்தியாலயத்தின் உதவி அதிபர், கொழும்பு ரோயல் கல்லூரியின் பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட 07 பேரினது பணி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Royal-College

Related posts:

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசென்கா தடுப்பூசியை தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது பொலிஸாரின் கடமையே தவிர இராணுவத்தின் கடமை அல்ல – இராணுவ தளபதி ஷவேந்திர சில...
நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது - நீதி அமைச்சர் விஜய...