தரம் ஒன்று மாணவர்களின் சீருடை வவுசர்களின் செல்லுபடியாகும் செப்டெம்பர் 30 வரை நீட்டிப்பு – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Thursday, August 27th, 2020
சகல அரசு பாடசாலைகளிலும் தரம் 1 ஆம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களுக்கான செல்லுப்படியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதிவரை வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களுக்கான செல்லுப்படியாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வழங்கப்பட்ட வவுச்சர்கள் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் நாட்டில் ஏற்பட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு வவுச்சர்கள் செல்லுப்படியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நவம்பர் முதல் மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் விநியோகம்!
மூன்று தேர்தல் திருத்தச் சட்டமூலங்களும் எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் விவாதிக்கப்படும்!
பரேட் சட்ட விவகாரம் - இலங்கை வங்கிகள் சங்கம் எச்சரிக்கை!
|
|
|


