தரமான மருந்துகளை மக்கள் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள புதிய சட்டம் – ஜனாதிபதி!

Sunday, October 30th, 2016

மக்கள் தரமான மருந்து வகைகளைக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே வர்த்தமானி மூலம் புதிய சட்டவிதிகள் அறிமுகம் செய்யப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட வைத்தியசாலைக்கு என நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தை நேற்று திறந்துவைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, வர்த்தமானி அறிவித்தலின் பின்னர், சில மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அறியக்கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதுதவிர, மேற்குலக நாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் மருந்து வகைகளைக் குறைந்த விலையில் சந்தைக்கு விநியோகிக்க முடியாதுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டிள்ளார்.

எவ்வாறாயினும், தாம் அதிகாரத்திற்கு வந்த பின்னர், ஔடத கொள்கை தொடர்பிலான புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு, அதுகுறித்து சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்களுக்கான சட்ட வரையறைகளைத் தயாரித்து, நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

president-1

Related posts:

மீண்டும் கொரோனா தொற்று பரவும் ஆபத்து ; தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு சுகாதார ...
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டினை தனியாருக்கு வழங்க நடவடிக்கை - பெட்ரோலிய...
நாட்டை பொறுப்பேற்க அஞ்சியவர்கள் இன்று சுதந்திரம் தொடர்பில் பேசுவது வேடிக்கையாக உள்ளது - காணி உரிமம்...

எந்தவொரு நோய் அறிகளும் தென்படவில்லை - இலங்கையில் புதிய கொரோனா நோயாளிகள் தொடர்பில் - சுகாதார பரிசோதக...
பி.சி.ஆர் பரிசோதனை ஒன்றுக்கு 6000 ரூபாவிற்கு அதிகம் செலவு - தனியார் வைத்தியசாலைகளின் பங்களிப்புடன்...
ஸ்ரீலங்கன் விமான சேவை, 2024 ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய உத்தரவாதப் பத்திரத்திற்கான வட்டித் தொகையை செலு...