தமிழ் மாணவன் தாக்கப்பட்டமையால் கிழக்கு பல்கலையில் வேலை நிறுத்தம்!

Tuesday, May 31st, 2016

கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று  ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாக சங்கத்தின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த காலமாக பெரும்பான்மை இன மாணவர்களால் பல்கலைக்கழக உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் சக தமிழ் மாணவர்களும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய தண்டனைகள் வழங்கப்படாமல் இருப்பதும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

மேற்படி சம்பவங்களை கண்டித்து மாணவர்களின் எதேச்சைத்தனமான இந் நடவடிக்கைகளுக்கு நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோரியும், கிழக்கு பல்கலைக்கழகம் ஆசிரிய சங்கம் ஆரம்பித்துள்ள தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை கிழக்குப் பல்கலைக்கழகம், திருகோணமலை வளாகம், சுவாமி விபுலானந்தா கற்கைகள் நிறுவகம் ஆகிய இடங்களில் மேற்கொள்வதென கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

எனவே இவ்வாறான நிகழ்வுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு தங்களை வினயமாக கேட்டுக் கொள்வதோடு தவறும் பட்சத்தில் எமது ஊழியர் சங்கமும் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை வேதனையுடன் அறியத் தருகின்றோம் என தெரிவிக்கப்பட்டடுள்ளது

Related posts: