தமிழ் மக்களின் வாக்களிப்பு இம்முறை வீணடிக்கப்படாது – ஈ.பி.டி.பி. வேட்பாளர் விக்னேஸ் நம்பிக்கை!
Sunday, July 12th, 2020
உணர்வுகளுக்கு ஆட்பட்டு உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இம்முறையும் தமிழ் மக்களின் வாக்களிப்பு அமையுமாயின், அவை வீட்டு சமையலறையில் உள்ள குப்பை கூடைகளில் இடுகின்றமைக்கு ஒப்பானதாகும் என ஈ.பி.டி.பி. வேட்பாளர் விக்னேஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆத்திசூடி பிரதேச மக்களினால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர் தலைமையில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று நடைபெற்றது இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் –
தமிழ் மக்க்ள ஏறத்தாள 3 தசாப்தங்களுக்கு மேலாக வெற்றுப் பேச்சுக்களுக்கும் போலி உணர்வூட்டல்களுக்கும் பின்னால் அணிதிரண்டு சென்று தமது பெறுமதி மிக்க ஜனநாயக அதிகாரத்தை கொடுத்தமையால் இன்றுவரை எத்தகையதொரு தீர்வையும் எட்டமுடியாதுள்ளனர்.
ஆனால் இம்முறை அத்தகையதொரு தவறை செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


