தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!.
Friday, November 10th, 2023
நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் குமாரசிறி ரத்னாநாயக்கவினால் எழுப்பப்பட்ட வாய்மொழிமூல வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே, கல்வி இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்றில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா தாண்டவம்: இதுவரை 33 ஆயிரத்து 993 பேர் பலி!
டெல்டாவால் மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் - மருத்துவர் அசேல குணவர்தன!
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் நிறுத்தம் - யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்...
|
|
|


