தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உட்கட்சி பூசலின் வெளிப்பாடு : யாழ் மாநகரின் பதில் முதல்வரை கைவிட்டது கூட்டமைப்பு!

Thursday, July 9th, 2020

யாழ் மாநகரசபையின் மாதாந்த கூட்டத்தை ஆழும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களே புறக்கணித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அதன் பங்காளிக் கட்சியான ரெலோ அமைப்புக்கும் இடையேயான முறண்பாட்டை வெளிப்படுத்திய சம்பவமொன்று இன்றையதினம் நடைபெற்றுள்ளது.

யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் அதன் பதில் முதல்வர் ஈசன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது ஏற்கனவே பல முரண்பாடுகளுடன் காணப்பட்ட மாநகரசபையின் ஆழும் தரப்பினர் ஈசனின் தலைமையில் கூடிய மாநகரின் கூட்டம் சட்டவிரோதமானது என தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

ஆனாலும் பதில் முதல்வர் சபையை கொண்டுசெல்வதற்கான ஆதரவை எதிர்கட்சி தரப்பினர் வழங்கியதை அடுத்த கூட்டம் தொடர்ந்தும் நடைபெற்றது.

முன்பதாக கூட்டத்தின் ஆரம்பதில் இக் கூட்டம் சட்டவலுவற்ற கூட்டம் மாநகர கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நடைபெறவில்லைஎன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினார்களால் கூட்டிக்காட்டப்பட்டதுடன் சட்டவலுவற்ற இக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என்று அனைத்து  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

மாநகர கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் ஒரு கூட்டமானது நான்கு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படவேண்டும் என்பது நியதி. ஆனால் அதனைக் காரணம் காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தது.

ஆனால் கடந்த இரண்டரை வருடங்களாக சபை கூட்டத்தொடர்களில் பல சட்ட வலுவற்ற விடயங்கள் நடந்திருக்கின்றன. பல மாநகர கட்டளைச் சட்டங்களை மீறி நடக்கின்ற செயல்கள் நடைபெற்றன. அப்போது எல்லாம் மௌனமாக இருந்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று கூட்டம் குறித்த திகதியை விடுத்து ஒரு நாள் முன்கூட்டியே நடாத்தப்பட்டு விட்டது என்று இக் கூட்டம் சட்டவலுவற்றது என்று கூறி வெளிநடப்பு செய்தது வேடிக்கையாக உள்ளதென சமூக அக்கறையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கடந்த காலங்களில் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமை தாங்கிய மாநகர சபை அமர்வுகளில் பல சட்ட மீறல்களைச் சுட்டிக் காட்டிய போது அதற்கு முதல்வர் அவர்கள் ஆம் மீறப்பட்டுள்ளது அதனால் என்ன பிரச்சனை என்ன தீமை என்று வெளிப்படையாக கேட்ட போது அதற்கு ஆமா பாடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் எல்லோரும் இன்று ஒரு சிறு விடயத்திற்கு பொங்கி எழுந்து வெளி நடப்பு செய்தது ஆச்சரியமாக இருந்தது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முதல்வர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அன்றைய தினம் நடைபெற வேண்டிய கூட்டத்தினை வேறு ஒரு திகதிக்கு பிற்போட்டார்.

அத்துடன் ஒரு தடவை முதல்வர் தன்னுடைய தூரத்து உறவினரின் மரண வீட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கூட்டத்தினை இடை நடுவில் நிறுத்தி விட்டு கலந்து கொள்ள சென்றார் அப்போது மனித நேயத்தின் அடிப்படையில் சபை அனுமதி வழங்கியது

பல்வேறு மாநகர கட்டளைச் சட்டங்கள் மீறும் போது மௌனமான இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்றைய சபை நடவடிக்கைகளை ஒரு உறுப்பினரின் தந்தையின் நினைவு நாளுக்காக ஒரு நாள் முன்கூட்டி கூட்டப்பட்ட கூட்டம் சட்டவலுவற்றது என்ற காரணத்தினால் வெளிநடப்பு செய்தது சரி தானா? என்றுமு; மாநகர உறுப்பினர்களுக்கள் பேசப்படுகின்றதுது..

சுமந்திரன் அவர்கள் உடன் கலந்து கொள்வதற்காக கூட்டம் பிற்போடலாம், மரண வீட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கூட்டத்தை ஒத்தி வைக்கலாம், 27 ஆம் திகதி வைக்க வேண்டும் என்ற கூட்டத்தை 28 ஆம் திகதி வைக்கலாம். ஆனால் ஒரு சக உறுப்பினரின் நினைவு நாளில் பங்கு பற்றவதற்கு ஒரு நாள் முன் கூட்டிவைக்கப்பட்ட கூட்டம் சட்ட வலுவற்றது யாரை கேட்டு திகதியை மாற்றினீர்கள் எனக் கேட்டதில் இருந்து கூட்டமைப்புக்குள் ஆதிக்கவெறி தலைதூக்கியதோடு அடங்கும் நேரமும் வந்து விட்டது என்றே கூறவேண்டும்  பிரதி முதல்வரது தரப்பினர் கூட்டமைப்பின் மீது குறிறம்சாட்டியுள்ளமை கறிப்பிடத்தக்கது.

இதனிடைடயே யாழ் மாநகர மத்திய பகுதியில் ஏற்கனவே வறிய வியாபாரிகளுக்காக வழங்கப்பட்டிருந்த 19 கடைகளையும் அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அகற்றாது தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான வழிவகைகளை முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியதை அடுத்து அதற்குகு இணக்கம் தேரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நல்லூர் திருவிழா காலத்தில் ஆலய வழிபாட்டு நிகழ்வகளை சுகாதார தரப்பினரது வழிமுறைகளை பின்பற்றி நடைமுறைப்படுத்துவதற்கு சபை பூரண ஒத்தழைப்பை வழங்க வேண்டும் என்றும் இணக்கம் காணப்பட்டதுடன் மேலதிகமாக திருவிழா தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஒத்தழைப்புக்களையும் பெற்றுக் கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


விரிவான பொருளாதார வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் வருடமாக அடுத்த ஆண்டு பிரகடனம் - நிதியமைச்சர் ரவி!
இலங்கையின் சுற்றுலா மறுமலர்ச்சி பயணத்தில் இந்தியா முன்னணிப் பங்காளியாக உள்ளது - கொழும்பிலுள்ள இந்திய...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் டிஜிட்டல் தொடு திரை திறந்து வைப்பு - வைத்தியசாலையில் ஏழு நுழைவாயி...