தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை – டி.எம்.சுவாமிநாதன்

Wednesday, May 11th, 2016

இலங்கை சிறைச்சாலை கட்டமைப்பை மேலும் மனிதாபிமானத்துடன் கூடியதாக மாற்றியமைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள, மூன்றாவது ஆசிய பசுபிக் பிராந்திய சீர்திருத்த முகாமையாளர்கள் மாநாடு கொழும்பில் நேற்று  செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியது.

இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்த உரையாற்றுகையில், ஸ்ரீலங்காவின் மிகப்பெரிய சிறைச்சாலையான வெலிக்கடையை வேறு ஒரு இடத்தில் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையை கட்டுப்படுத்த பொலிஸ் மோப்பநாய் பிரிவு ஒன்றை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நீர் மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செஞசிலுவை சங்கத்தின் உதவியுடன் சிறைச்சாலைகளில் ஏற்படுத்தவுள்ளதோடு, சிறைச்சாலைகளின் தரத்தினை சர்வதேசத்தின்  நியமங்களுக்கு அமைய பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பது உள்ளிட்ட கைதிகளின் நலன்களை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

எத்தனை நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெளிவுபடுத்த வ...
புதிய பிரமர் ரணிலுக்கு கிடைத்த முதல் வெற்றி - 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் ...
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை - சுவாசக்கோளாறினால் பாதிக்கப்படும் நோயாளர்கள் மேலும் பாதிக்க...

இலங்கையில் திரிபடைந்த கொரோனா வைரஸ் - கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் மகப்பேறியல் ந...
கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் -03 வருடங்களுக்குள் நிறைவடையமெனவும் தெர...
அரச வைத்தியசாலைகளில் கட்டாயமாக நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - வடக்கு மாகாண ஆளுநர் தி...