தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை – அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன – நீதி மைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Thursday, February 11th, 2021
தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை. அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது, அரசியல் கைதிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளித்ததை தொடர்ந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் 12,843 பேர் அரசாங்கத்திடம் சரணடைந்தனர்.
இவ்வாறு சரணடைந்தவர்களும் 600 சிறுவர் போராளிகளும் அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டனர்.
பிரதமர் தெரிவித்ததன் அடிப்படையில் இலங்கையில் எந்த அரசியல் கைதிகளும் இல்லையென்றும் தங்களின் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஏராளமானோர் தடுப்புக் காவலிலுள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், அவர்களின் வழக்குகளை எவ்வாறு விரைவுபடுத்தலாம் என்பதை அறிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், சட்ட மாஅதிபர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினேன்.
அரசாங்கம் அவர்களை வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை. அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆகவே அவர்களுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகளை தனித்தனியாக விசாரிக்குமாறு சட்ட மாஅதிபரிடம் வினவப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


