தமிழர்களின் அனைத்துவகைப் பின்னடைவுகளுக்கும் சரியானஅரசியல் தலைமை அமையாமையே காரணமாகும் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் ஸ்டாலின் சுட்டிக்கட்டு!

Thursday, August 23rd, 2018

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் முயற்சிகளைகாலத்தின்அவசியமானஒன்றாகவேகருதுகின்றோம். அதேவேளை இந்த வேலைத்திட்டமானது தேர்தலை கருத்தில் கொண்டதாக மட்டுமல்லாமல், எமது மக்களின் வாழ்வியல் மற்றும் பொருளாதாரத்தை முன்னேற்றமடையச் செய்யும் நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டமாகவும் அமையவேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.
நேற்றையதினம் (22.08.2018) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட அனைத்துத் தமிழ்க் கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதேமேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்தக் கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டுமேலும் கருத்துத் தெரிவித்தஊடகச் செயலாளர் ஸ்டாலின் அவர்கள்,
கிழக்கில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாi~கள் புறக்கணிக்கப்பட்டதற்கும், அபிவிருத்திமற்றும் பொருளாதாரபலாபலன் கிடைக்காமல் போனதற்கும் கிழக்கில் சரியானஅரசியல் தலைமை இல்லாமல் போனமையும்,தமிழ் மக்கள் சரியானவர்களைதேர்ந்தெடுக்காமல் போனதுமேபிரதானகாரணமாகும்.
எனவேஎல்லாவகையிலும் பின்னடைவைக் கண்டுவரும்கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளைமதித்து,உணர்ச்சிகளுக்கும்,வாக்குஅபகரிப்புக்களுக்கும் எதிர்காலத்திலும் இடமளிக்காமல்,சரியானவர்களைஅடையாளம் காண்பதுகாலத்தின் அவசியமாகியுள்ளது.
அந்ததேடலுக்கானமுயற்சியைகிழக்குத் தமிழர் ஒன்றியம் கடந்த ஒருவருடமாகநிதானமாக முன்னெடுத்திருப்பதன் பலாபலனாகவே இந்த இடத்தில் அரசியல் மற்றும் அணுகுமுறைவேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒரேமண்டபத்திற்குள் அமர்ந்துகலந்துரையாடுகின்ற சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்தமுயற்சியைசரியானதிசையிலும், பலமானதாகவும் முன்னெடுக்கப்படுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிதன்னாலானபங்களிப்பை வழங்கும்.
மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!! என்பதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் கொள்கையாகும் எனவே இணைந்த வடக்கு,கிழக்கு மாநிலத்திற்குள் தமிழர்கள் சுய நிர்ணயஉரிமையுடன் வாழவேண்டும் என்றஉயரிய இலக்குநோக்கியபயணத்திற்குகிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் இந்தமுயற்சிகள் கணிசமானபங்களிப்பைச் செய்யும் என்றநம்பிக்கையுடன்,இந்தக் கூட்டுமுயற்சியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகியநாம் வெளிப்படையாகஎமதுஆதரவைதெரிவித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தஅனைத்துத் தமிழ்க் கட்சிகளின் ஒன்றுகூடல் சந்திப்பில் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்டாலின்,சட்சியின் மட்டக்களப்புமாவட்டநிர்வாகச் செயலாளரும்,மட்டக்களப்புமாநகரசபையின் உறுப்பினர் சிவானந்தராஜா (சிவா),கட்சியின் அம்பாறைமாவட்டநிர்வாகச் செயலாளர் பாலேந்திரன்(அகிலன்) ஆகியோரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் கலந்துகொண்டிருந்தனர்.

st2

st4

 

Related posts: