தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை! !

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியுள்ளது.
இந்த மனு இன்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது வாதத்தை அவதானித்த நீதவான் நீதிமன்றம் மாநாட்டை நடத்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணாக கூட்டங்கள் நடைபெற்று, அதன் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தக் கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வகையில் இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தின் அடிக்கல் நாட்டல்!
உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியீடு!
நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மி.மீக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வடக்கு கிழக்கு உட்பட...
|
|