தமிழக முதல்வரின் மறைவால் கச்சதீவு அந்தோனியார் ஆலய புனிதப்படுத்தும் நிகழ்வு ஒத்திவைப்பு!
Tuesday, December 6th, 2016
புதிதாக கட்டப்பட்டுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் புனிதப்படுத்தும் திருவிழா தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாழ். ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.
கச்சதீவில் புதிதாக புனித அந்தோனியார் ஆலயம் கட்டப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலயத்தின் புனிதப்படுத்தும் விழா நாளை (7) நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தமிழக முதல்வர் செல்வி ஜெயராம் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார். இதனையடுத்து புனிதப்படுத்தம் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாழ் ஆயர் இல்லம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
டெங்கு நோய் பரவுவதற்கு குப்பைகளே காரணம்- சுகாதார அமைச்சர்
முன்பள்ளி சிறுமியின் விரல் அகற்றப்பட்டது. குறித்து விசாரணை!
மாகாண சபை தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு!
|
|
|


