தமிழகத்தில் இருந்து மற்றுமொரு மனிதாபிமான உதவிகளுடனான கப்பல் இலங்கை வருகை!
Thursday, June 23rd, 2022
தமிழக மக்களால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுடனான மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பல் நேற்று (22) கொழும்பு துறைமுகத்தை நோக்கி புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கப்பலில் 14,712 தொன் அரிசி, 250 தொன் பால்மா மற்றும் 38 தொன் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 15,000 தொன் உள்ளடக்கங்களாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய மக்களால் வழங்கப்பட்ட முதல் மனிதாபிமான உதவித்தொகை கடந்த மாதம் 22 ஆம் திகதி நாட்டை வந்தடைந்ததுடன் அதில் 9,000 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன் மருந்துகள் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கடற்படையினரை பயன்படுத்தி எல்லை தாண்டும் இந்திய மீன் பிடியாளர்களை கட்டுப்படுத்துங்கள் - அமைச்சர் டக்ள...
அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன - கல்வி அமைச...
மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தாக்கிய தாய் - ஏறாவூர் பொலிசாரால் கைது!
|
|
|


